இஸ்ரோ, அக்டோபர் இறுதியில் 36 வணிகச் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது

அக்டோபர் மாத இறுதியில், பிரிட்டனின் சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனமான OneWeb நிறுவனத்தின் 36 வணிகச் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ‘OneWeb India-1 mission/ LVM3 M2' என்ற திட்டத்தின் படி, இஸ்ரோவின் அதிக கனம் உள்ள LVM 3 (Launch Vehicle Mark III) மூலம், ஒரே முறையில் 36 செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுதல் குறித்த சர்வதேச வணிகச் சந்தையில், இந்தியாவின் இஸ்ரோ […]

அக்டோபர் மாத இறுதியில், பிரிட்டனின் சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனமான OneWeb நிறுவனத்தின் 36 வணிகச் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ‘OneWeb India-1 mission/ LVM3 M2' என்ற திட்டத்தின் படி, இஸ்ரோவின் அதிக கனம் உள்ள LVM 3 (Launch Vehicle Mark III) மூலம், ஒரே முறையில் 36 செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுதல் குறித்த சர்வதேச வணிகச் சந்தையில், இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு விரைவில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இஸ்ரோவின் முதல் சர்வதேச வணிகத் திட்டமாகும்.

இந்தத் திட்டம், New Space India Limited (NSIL) மற்றும் இஸ்ரோ ஆகியவற்றுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரிலிருந்து செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்காக ஒன் வெப் நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்களில் என் எஸ் ஐ எல் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பூமியிலிருந்து குறைந்த தூரத்தில், இந்த செயற்கைக் கோள்கள் சுற்றுவட்ட பாதையில் நிறுவப்பட உள்ளன. அரசாங்க செயல்பாடுகள், வணிகச் செயல்பாடுகள் மற்றும் சமூக நலன் குறித்த பயன்பாடுகளுக்காக இவை செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன் வெப் நிறுவனம், விண்ணில் ‘Gen 1 LEO constellations’ என்ற பெயரில் செயற்கைக்கோள் கூட்டமைப்பை உருவாக்கி வருகிறது. தற்போது, இந்தியாவின் இஸ்ரோ மூலம் 36 செயற்கைக் கோள்கள் அந்த கூட்டமைப்பின் பகுதியாகச் செலுத்தப்பட உள்ளன. அதன் பிறகு, அந்தக் கூட்டமைப்பின் 70 சதவீத பணிகள் நிறைவு பெறும் என்று ஒன் வெப் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu