கடந்த வாரத்தில், சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 86 பேர் உயிரிழந்தனர். இது போன்ற பேரழிவு மீண்டும் ஏற்படாமல் தடுக்க, இமாலய ஏரிகளை இஸ்ரோ கண்காணிக்க உள்ளது.
நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிக்கிம் மாநிலம், மலைபாங்கான பகுதியாகும். இங்கு, கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழப்புகள் தவிர்த்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற பேரழிவை எதிர்காலத்தில் தடுப்பதற்காக, செயற்கைக்கோள் உதவியுடன் 2 இமாலய ஏரிகளை இஸ்ரோ கண்காணிக்க உள்ளது. தெற்கு லோணக் மற்றும் ஷாகோ சூ ஆகிய 2 ஏரிகளும் இஸ்ரோவின் தொடர் கண்காணிப்பில் கொண்டு வரப்பட உள்ளன.