இஸ்ரோ, நிலவு மற்றும் சூரியன் திட்டங்களை அடுத்தடுத்து நிகழ்த்தியுள்ள நிலையில், வெள்ளி கிரகம் குறித்த ஆய்வு திட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.இந்தியாவின் விண்வெளி திட்டங்களில், சந்திரயான் மற்றும் ஆதித்யா திட்டங்கள் முக்கிய வெற்றியை பெற்றுள்ளன. அந்த வரிசையில், அடுத்ததாக, வெள்ளி கிரகத்துக்கான ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த முதல் கட்ட ஆய்வு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. மேலும், இதற்கான சுமை பாகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூமிக்கும் வெள்ளி கிரகத்துக்கும் அதிகமான ஒற்றுமைகள் உள்ளதால், இது பூமியின் இரட்டையர் என அறியப்படுகிறது. அதன்படி, இந்த கிரகத்தின் ஆய்வுகளை தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. - இவ்வாறு சோம்நாத் தெரிவித்துள்ளார்.