சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ள ஆக்சியம் ஸ்பேஸ் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. விண்வெளியில் எடை இல்லாத நிலையில் உணவை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும், விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. KBR நிறுவனத்துடன் இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் இந்த பயிற்சியை நடத்தி வருகிறது.
இந்த பயிற்சியில் ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்ல உள்ள இந்திய வீரரும் பயிற்சி பெறுகிறார். அவருக்கு முதற்கட்ட பயிற்சி நிறைவடைந்தாக தகவல் வெளிவந்துள்ளது.