இந்தியாவின் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் முதல் முழு வட்ட புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலத்தில், சூட் (SUIT) என்று அழைக்கப்படும் சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் உள்ளது. இந்த தொலைநோக்கி மூலம், வெவ்வேறு அலை நீளங்களில் சூரியனின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனின் குரோமோஸ்பியர் மற்றும் ஒளி மண்டலம் ஆகியவற்றின் புகைப்படங்களை எடுத்து ஆதித்யா எல் 1 அனுப்பியுள்ளது. அறிவியல் சார்ந்த பல்வேறு பில்டர்கள் பயன்படுத்தப்பட்டு, நீலம், பச்சை, சிவப்பு போன்ற பல வண்ணங்களில் சூரியனின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.