இஸ்ரோ புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்

சோம்நாதின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு உலக அளவில் விண்வெளித் துறையில் முக்கிய சாதனைகளை செய்து வருகிறது. இஸ்ரோ தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு சவால் அளித்து, விண்வெளி ஆய்வில் முன்னணி நிலையை வகிக்கின்றது. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் அவர்களின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. இதற்குப் பிறகு, மத்திய அரசின் நியமனக்குழுவின் தேர்வின் மூலம் […]

சோம்நாதின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பெங்களூரை தலைமையிடமாக கொண்டு உலக அளவில் விண்வெளித் துறையில் முக்கிய சாதனைகளை செய்து வருகிறது. இஸ்ரோ தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு சவால் அளித்து, விண்வெளி ஆய்வில் முன்னணி நிலையை வகிக்கின்றது. இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் அவர்களின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது.

இதற்குப் பிறகு, மத்திய அரசின் நியமனக்குழுவின் தேர்வின் மூலம் வி. நாராயணன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 14-ம் தேதி, அவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கின்றார். தற்போது, வி. நாராயணன் இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவர் இஸ்ரோவின் பல முக்கிய பொறுப்புகளை வகித்து சிறந்த பங்களிப்பு செய்துள்ளார். வி. நாராயணன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu