பிஎஸ்எல்வி-க்கு மாற்றாக வரும் என்ஜிஎல்வி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

October 14, 2022

இஸ்ரோ தலைவர் சோம்நாத், திருவனபுரத்தில் நடைபெற்று வரும், மூன்று நாட்கள் பொறியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “இஸ்ரோவின் நம்பிக்கை வாய்ந்த ஏவுகலமாக பிஎஸ்எல்வி இருந்தது. தற்போது, அதைவிட திறன் வாய்ந்த ஏவுகலம் வடிவமைப்பில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. அடுத்த தலைமுறைக்கான ஏவுகலம் என்ற பொருளில், Next Gen Launch Vehicle (NGLV) என்று அது அழைக்கப்படுகிறது. எதிர்காலத்தில், ஒருநாள், பிஎஸ்எல்வி-க்கு மாற்றாக என்ஜிஎல்வி பயன்படுத்தப்படும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், என்ஜிஎல்வி […]

இஸ்ரோ தலைவர் சோம்நாத், திருவனபுரத்தில் நடைபெற்று வரும், மூன்று நாட்கள் பொறியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “இஸ்ரோவின் நம்பிக்கை வாய்ந்த ஏவுகலமாக பிஎஸ்எல்வி இருந்தது. தற்போது, அதைவிட திறன் வாய்ந்த ஏவுகலம் வடிவமைப்பில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. அடுத்த தலைமுறைக்கான ஏவுகலம் என்ற பொருளில், Next Gen Launch Vehicle (NGLV) என்று அது அழைக்கப்படுகிறது. எதிர்காலத்தில், ஒருநாள், பிஎஸ்எல்வி-க்கு மாற்றாக என்ஜிஎல்வி பயன்படுத்தப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், என்ஜிஎல்வி ராக்கெட், குறைந்த விலையில், மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த தக்க வகையில், வடிவமைக்கப் படுவதாக கூறினார். மேலும், “10 டன்கள் எடையுள்ள பொருளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் நவீன திறன் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்படுகிறது” என்றார். மேலும், “ராக்கெட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, அதன் தாங்குதிறன் சற்று குறையும். வணிகச் செயற்கை கோள்கள் ஏவுதல், விண்வெளி ஆராய்ச்சி, எதிர்காலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புதல், பொருட்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லுதல் போன்ற பலவற்றை கருத்தில் கொண்டு, இதன் வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறினார். மேலும், பி எஸ் எல் வி கலத்தின் சேவை நிறுத்தப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், “வணிகத் தேவை நீடிக்கும் வரை, பி எஸ் எல் வி பயன்பாடு தொடரப்படும்” என்றார். மேலும், “இந்த ராக்கெட்டை நாட்டுடைமையாக்க முயற்சிகள் செய்யப்படும். அத்துடன், என் ஜி எல் வி யின் வணிக மாடல் குறித்த திட்ட வரைவு விரைவில் முடிவு செய்யப்படும். அதன் வழியாகவே, என் ஜி எல் வி யின் வணிக பயன்பாடு குறித்த இலக்கு நிர்ணயிக்கப்படும்” என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu