சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியாவை கடந்து சென்ற காணொளி வெளியீடு

March 1, 2023

சர்வதேச விண்வெளி நிலையம், இந்தியாவை கடந்து சென்ற காணொளி ஒன்றை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து, கிழக்கு கடற்கரை வரை விண்வெளி நிலையம் கடந்து செல்வது பதிவாகியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் தொடங்கி, மத்திய பிரதேசம் வழியாக, ஒடிசா கடற்கரை வழி சர்வதேச விண்வெளி நிலையம் கடந்து சென்றுள்ளது. அதன் போது, குவாலியர், பிலாஸ்பூர் உள்ளிட்ட நகரங்களின் புகைப்படங்களையும் சர்வதேச விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம், பூமியின் […]

சர்வதேச விண்வெளி நிலையம், இந்தியாவை கடந்து சென்ற காணொளி ஒன்றை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து, கிழக்கு கடற்கரை வரை விண்வெளி நிலையம் கடந்து செல்வது பதிவாகியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் தொடங்கி, மத்திய பிரதேசம் வழியாக, ஒடிசா கடற்கரை வழி சர்வதேச விண்வெளி நிலையம் கடந்து சென்றுள்ளது. அதன் போது, குவாலியர், பிலாஸ்பூர் உள்ளிட்ட நகரங்களின் புகைப்படங்களையும் சர்வதேச விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம், பூமியின் மேற்பரப்பிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியை சுற்றி வலம் வருகிறது. கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, பெங்களூரு நகரத்தின் காட்சியை வெளியிட்டது. மேலும், அதைத் தொடர்ந்து, இலங்கை வழியாகப் பறந்து சென்றதையும் பதிவிட்டுள்ளது. அதே வேளையில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட ரஷ்யாவின் பைக்கால் ஏரி, போர்ச்சுகல் லிஸ்பன், எகிப்து கைரோ ஆகியவற்றின் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu