சென்னை வண்டலூர் அடுத்த கிளம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலைய மையப்பகுதிக்கு நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 88 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளொன்றுக்கு 2300 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி மற்றும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்தின் மையப் பகுதிக்கு நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அமைப்பு பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. எனவே இன்று இதற்காக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும். விண்ணப்பிக்க பிப்ரவரி 14-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.