இஸ்தான்புல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் பலி; 81 பேர் காயம் - ஒருவர் கைது

November 14, 2022

ஞாயிற்றுக்கிழமை அன்று, துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் பயங்கர குண்டு வெடிப்பு நேர்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 81 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி புயட் ஆக்டே தெரிவித்திருந்தார். அதன்படி நடந்த விசாரணையில், சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சியில், அந்தப் பெண் 40 நிமிடங்களுக்கும் மேலாக குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் பெஞ்சில் அமர்ந்திருந்ததும், சரியாக குண்டுவெடிப்பு நேர்வதற்கு 2 […]

ஞாயிற்றுக்கிழமை அன்று, துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் பயங்கர குண்டு வெடிப்பு நேர்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 81 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி புயட் ஆக்டே தெரிவித்திருந்தார். அதன்படி நடந்த விசாரணையில், சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சியில், அந்தப் பெண் 40 நிமிடங்களுக்கும் மேலாக குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் பெஞ்சில் அமர்ந்திருந்ததும், சரியாக குண்டுவெடிப்பு நேர்வதற்கு 2 நிமிடங்களுக்கு முன்னர் அவரிடம் இருந்த பையை விட்டு சென்றதும் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சியை முக்கிய ஆதாரமாக வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில், துருக்கியின் PKK/PYD கட்சிகளில் இருந்து பிரிந்து வந்த தீவிரவாத கும்பல் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக இருக்கும் என்று கருதப்படுவதாக அந்நாட்டின் உள்துறை விவகார அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu