தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள அசெஞ்சர் நிறுவனம், அயர்லாந்தில் 890 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், ஏற்கனவே 400 அசெஞ்சர் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இது அடுத்த சுற்று பணி நீக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.
உலக அளவில், ஐரோப்பாவின் மைய அசெஞ்சர் கிளையாக அயர்லாந்து உள்ளது. இங்கு, பல நாடுகளைச் சேர்ந்த 6500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், இந்த பணி நீக்கம் அசெஞ்சர் நிறுவனத்தின் ஐரோப்பா வர்த்தகத்தில் மிகப்பெரிய பின்னடைவாக சொல்லப்படுகிறது. மெட்டா, மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் அடுத்த சுற்று பணி நீக்கத்தை அறிவித்து வரும் நிலையில், அசெஞ்சர் இந்த வரிசையில் இணைந்துள்ளது.














