ஆம் ஆத்மி கட்சிக்கு நான் 60 கோடி ரூபாய் கொடுத்தது உண்மை: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்

December 21, 2022

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு நான் 60 கோடி ரூபாய் கொடுத்தது உண்மை தான் என அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதியிருந்தார். அதில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் தனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி அளிப்பதாக உறுதி […]

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு நான் 60 கோடி ரூபாய் கொடுத்தது உண்மை தான் என அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுதியிருந்தார். அதில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் தனக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி அளிப்பதாக உறுதி அளித்ததால் அக்கட்சிக்கு 60 கோடி ரூபாய் பணம் அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான ஒரு வழக்கின் விசாரணைக்காக புதுடில்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சுகேஷ் சந்திரசேகரை போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அப்போது பேசிய அவர், புதுடில்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை நான் சந்தித்ததும், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு 60 கோடி ரூபாய் கொடுத்ததும் உண்மை தான் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu