இந்தியாவை சேர்ந்த சத்னம் சிங் என்பவர் இத்தாலியில் இறந்த வழக்கில் பண்ணை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த சத்னம் சிங் என்பவர் இத்தாலியில் ரோம் நகருக்கு அருகே உள்ள லாசியோவில் உள்ள ஒரு பண்ணையில் கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவர் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கை எந்திரத்தில் மாட்டிக் கொண்டு துண்டிக்கப்பட்டது. உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அவரது முதலாளி கொண்டு செல்லவில்லை. அதற்கு பதில் அவரை அங்கேயே விட்டுவிட்டு சென்றார். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சத்னம் உயிர் இழந்தார். இது தொடர்பாக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.
இந்நிலையில் சத்னம் சிங் மரண வழக்கில் அந்தப் பண்ணையின் உரிமையாளர் அண்டோனெல்லோ லோவாடோவை போலீசார் கைது செய்துள்ளனர்.