இத்தாலியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 33 இந்தியத் தொழிலாளர்கள் மீட்பு

July 15, 2024

இத்தாலியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 33 இந்தியத் தொழிலாளர்களை இத்தாலி அதிகாரிகள் விடுவித்துள்ளனர். இத்தாலியில் உள்ள வெரோனா என்ற மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 33 இந்திய விவசாய பணியாளர்களை இத்தாலி அதிகாரிகள் விடுவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் அப்பகுதியில் உள்ள ஸ்ட்ராபெரி பழத்தோட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் என்பவர் வேலை பார்த்து வந்தார். பணியின் போது இயந்திரத்தில் அவருடைய கை சிக்கி துண்டானது. அப்போது அவருக்கு உரிய சிகிச்சை […]

இத்தாலியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 33 இந்தியத் தொழிலாளர்களை இத்தாலி அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

இத்தாலியில் உள்ள வெரோனா என்ற மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 33 இந்திய விவசாய பணியாளர்களை இத்தாலி அதிகாரிகள் விடுவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் அப்பகுதியில் உள்ள ஸ்ட்ராபெரி பழத்தோட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் என்பவர் வேலை பார்த்து வந்தார். பணியின் போது இயந்திரத்தில் அவருடைய கை சிக்கி துண்டானது. அப்போது அவருக்கு உரிய சிகிச்சை ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலை ஓரமாக அந்தப் பண்ணையின் முதலாளி விட்டு விட்டுச் சென்றார். சத்தன் சிங் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதை தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் மூலம் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் வாரம் முழுவதும் தினம் பத்து முதல் 12 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு 360 கூலியாக வழங்கப்பட்டு வந்தது. இவர்களை இந்திய ஏஜென்ட்கள் இரண்டு பேர் ஏமாற்றி சீஸ்னல் ஒர்க்கர் பெர்மட்டில் இத்தாலிக்கு அழைத்துச் சென்று பணியில்ல அமர்த்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த தொகையை அவர்கள் முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் 12 லட்சம் செல்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கி தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். அவ்வாறு ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக இருந்த 33 இந்தியர்களை இத்தாலி அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu