இத்தாலி அரசு, வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதித்துள்ளது.
2004-ம் ஆண்டிலிருந்து இத்தாலியில் வாடகைத் தாய் முறைக்கு தடை இருந்தாலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இத்தாலியர்கள் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், இத்தாலி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், முழு தடைக்கு 84 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் பதிவானதை தொடர்ந்து, வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் செயல்பாடு குற்றமாக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக மக்களிடையே பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக இது பழமைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், சமபாலின தம்பதிகளுக்கு விரோதமாக இருப்பதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான வலதுசாரி அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.