இத்தாலியில் லம்பேடுசா தீவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் குழந்தை ஒன்று மூழ்கி பலியாகி உள்ளது. இந்த விபத்தில் எட்டு பேரை காணவில்லை. இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தீவுதான் லம்பேடுசா. பல ஆண்டுகளாகவே புலம்பெயர்ந்தோர் அதிகம் வரும் இடமாக உள்ளது. இந்நிலையில் இத்தாலியில் லம்பேடுசா தீவில் படகு ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வகை இரண்டு வயது குழந்தை பலியானது. அதோடு எட்டு பேரை காணவில்லை. இந்த படகு துணிச்சியாவின் துறைமுக நகரான ஸ்பாக்ஸில் இருந்து வந்துள்ளது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பயணித்தனர். லம்பேடுசா தீவில் இது பயணிக்கும் போது திடீரெனக் கவிழ்ந்தது. அப்போது சிலர் நீந்தி கரைக்கு சென்றனர். மற்றவர்களை கடலோர காவல் படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் மீட்டனர். இதில் மொத்தம் 42 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த படையில் புர்கினா பாசோ, கினியா பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. தற்போது கடலோர காவல் படையினர் காணாமல் போனவர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்.