இத்தாலி நாட்டில் உள்ள துடிப்பான எரிமலையான மவுண்ட் எட்னா சீற்றமடைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை ஆகும். அத்துடன், கடந்த 5 லட்சம் ஆண்டுகளாக அதிக முறை சீற்றமடைந்த எரிமலையாகவும் அறியப்படுகிறது. இதன் காரணமாக, சிசிலியில் உள்ள கடானியா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இது இத்தாலியின் மிக முக்கியமான சுற்றுலா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
மவுண்ட் எட்னா எரிமலையில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது. இதன் காரணமாக, விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. கடானியா மேயர், அந்த மாகாணத்தில், பொதுமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதிவண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார். அந்தப் பகுதியில் எரிமலை சீற்றத்தால் கடுமையான புகை மண்டலம் சூழ்ந்துள்ளதே அதற்கான காரணம்.