இந்தியாவைப் பொறுத்தவரை, எஃப் எம் சி ஜி துறையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தது. தற்போது, இந்தியாவின் மதிப்பு மிக்க எப்எம்சிஜி நிறுவனமாக ஐடிசி முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஐடிசி நிறுவனம், ஆசியாவின் மிகப்பெரிய சிகரெட் வர்த்தகராக அறியப்படுகிறது. ஆனால், எஃப் எம் சி ஜி துறையிலும் ஐடிசி நிறுவனம் வேகமாக காலூன்றி வந்தது. இது தவிர, ஹோட்டல் வர்த்தகத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. எஃப் எம் சி ஜி துறையில், பேப்பர், ஸ்டேப்ளர் உள்ளிட்ட வர்த்தகத்தில் மிகப்பெரிய உயர்வு காணப்பட்டதால், நேற்றைய வர்த்தக நாளின் போது 6.1 டிரில்லியன் ரூபாய் மதிப்பிற்கு ஐடிசி உயர்ந்தது. இது ஐடிசி நிறுவன வரலாற்றில் உச்ச பட்சமாகும். அதன்படி, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் 6.09 டிரில்லியன் ரூபாய் மதிப்பை கடந்து, இந்தியாவின் முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விரைவில், ஹிந்துஸ்தான் யூனிலீவரை விட ஐடிசி நிறுவனம் வர்த்தகத்தில் முன்னேறும் என்று நிறுவனத்தின் சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.