ஓட்டல் வர்த்தகத்தை தனியாகப் பிரிக்க ஐடிசி நிர்வாகக் குழு ஒப்புதல்

July 24, 2023

இந்திய அளவில் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக ஐடிசி உள்ளது. இந்த வர்த்தக குழுமத்தின் மிக முக்கிய வர்த்தகமாக ஓட்டல் வணிகம் இருந்து வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தின் எஃப் எம் சி ஜி வர்த்தகத்தில் இருந்து ஓட்டல் வர்த்தகத்தை தனியாக பிரிப்பதற்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, ஐடிசி நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த […]

இந்திய அளவில் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக ஐடிசி உள்ளது. இந்த வர்த்தக குழுமத்தின் மிக முக்கிய வர்த்தகமாக ஓட்டல் வணிகம் இருந்து வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தின் எஃப் எம் சி ஜி வர்த்தகத்தில் இருந்து ஓட்டல் வர்த்தகத்தை தனியாக பிரிப்பதற்கு நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, ஐடிசி நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது, முழுமையான ஒப்புதல் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இரு வர்த்தகங்களை பிரிக்கும் நடைமுறை செபியின் வழிகாட்டு முறைகள் படி பின்பற்றப்படும் என கூறப்படுகிறது. இந்த வர்த்தக பிரிப்பு நடவடிக்கை மூலம், ஐடிசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், நிறுவனத்தின் பங்குகள் உயர்வடைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu