நாட்டின் முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமான ஐடிசியிலிருந்து பிரிந்த ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கு விலை உயர தொடங்கியுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் இருந்து நேற்றுடன் ஐடிசி ஹோட்டல்ஸ் பங்கு வெளியேறியுள்ளது. ஜனவரி 29 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம், தொடர் வர்த்தகத்துக்கு பிறகு சென்செக்ஸில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மூன்று நாட்கள் பங்கு விலை அப்பர் சர்க்யூட் அல்லது லோயர் சர்க்யூட் அடையாததால், தற்போது சென்செக்ஸ் குறியீட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலான போது, 30% தள்ளுபடியில் வர்த்தகம் தொடங்கியது. பின்னர் பங்கின் மதிப்பு மேலும் சரிந்தது. பிப்ரவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் பெரிதாக மாற்றம் இல்லை. NSE-யில் ரூ.180, BSE-யில் ரூ.188 என்ற ஆரம்ப மதிப்பில் பட்டியலான பங்கு, ரூ.39,126.02 கோடி சந்தை மதிப்புடன் தொடங்கியது. பின்னர் ரூ.34,266.48 கோடியாக குறைந்தது. பிரிவின் கீழ், ஐடிசி நிறுவனம் 40% பங்குகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மீதமுள்ள 60% பங்குகள், 10:1 விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.