ஐடிசி இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியீடு - நிகர லாபம் 6% உயர்வு

October 20, 2023

ஐடிசி நிறுவனம், இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 6.11% உயர்ந்து, 4955.9 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் மாத இறுதியில், நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்றதன் மூலமாக கிடைத்த மொத்த வருவாய் 3.83% உயர்ந்து, 19137.51 கோடியாக உள்ளது. மேலும், ஐடிசி நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 19270.02 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 3.55% உயர்வாகும். அத்துடன், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 3.54% உயர்ந்து, […]

ஐடிசி நிறுவனம், இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 6.11% உயர்ந்து, 4955.9 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் மாத இறுதியில், நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்றதன் மூலமாக கிடைத்த மொத்த வருவாய் 3.83% உயர்ந்து, 19137.51 கோடியாக உள்ளது. மேலும், ஐடிசி நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 19270.02 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 3.55% உயர்வாகும். அத்துடன், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 3.54% உயர்ந்து, 13278.69 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. ஐடிசி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை, இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. ஐடிசி பங்குகள் நேற்று சரிந்து வர்த்தகமாயின.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu