ஐடிசி நிகர லாபம் 23% உயர்வு

May 18, 2023

ஐடிசி நிறுவனம், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 23% உயர்ந்து 5175 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்கம் மூலம் கிடைத்த வருவாய் 7% உயர்ந்து 19058 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்ட் தொகையாக 6.75 ரூபாயை நிர்ணயம் செய்ய நிறுவனத்தின் செயற்குழு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், சிறப்பு டிவிடெண்ட் ஆக, […]

ஐடிசி நிறுவனம், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 23% உயர்ந்து 5175 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்கம் மூலம் கிடைத்த வருவாய் 7% உயர்ந்து 19058 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு இறுதி டிவிடெண்ட் தொகையாக 6.75 ரூபாயை நிர்ணயம் செய்ய நிறுவனத்தின் செயற்குழு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், சிறப்பு டிவிடெண்ட் ஆக, ஒரு பொது பங்குக்கு 2.75 ரூபாய் வழங்க பரிந்துரைத்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 14 முதல் 17ஆம் தேதி வரை டிவிடெண்ட் வழங்க தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துறைவாரியாக, சிகரெட் வர்த்தகம் 13% உயர்ந்து 8082 கோடியும், எஃப் எம் சி ஜி வர்த்தகம் 19% உயர்ந்து 4951 கோடியும் வருவாய் ஈட்டி உள்ளன. அதே வேளையில், ஐடிசி குழுமத்தின் ஓட்டல் வர்த்தகம் வரலாற்று உயர்வாக 99% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில், ஹோட்டல் வர்த்தக வருவாய் 809 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், வேளாண் வர்த்தகம் 17% சரிவடைந்து, 3607 கோடி அளவில் வருவாயைப் பதிவு செய்துள்ளது. மேலும், காகித அட்டை மற்றும் பேக்கிங் வர்த்தகம் 1.7% உயர்ந்து, 2221 கோடி ரூபாய் வருவாயை பதிவு செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu