ஐடிசி பங்குகள் 2 நாட்களில் 10% உயர்வு

July 24, 2024

ஐடிசி நிறுவனத்தின் பங்குகள், 2 வர்த்தக அமர்வுகளில் சுமார் 10% உயர்ந்து 500 ரூபாய் மைல் கல்லை கடந்து சென்றுள்ளது. மும்பை பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தக நாளில், ஐடிசி நிறுவனத்தின் ஒரு பங்கு 510.6 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த வளர்ச்சி, வலுவான காலாண்டு முடிவுகள் மற்றும் நேர்மறை சந்தை காரணமாக ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், ஜெப்ரீஸ் உள்ளிட்ட சந்தை மதிப்பாய்வு நிறுவனங்கள் ஐடிசி பங்குகள் தொடர்ந்து உயரும் என கணித்துள்ளன. நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி, […]

ஐடிசி நிறுவனத்தின் பங்குகள், 2 வர்த்தக அமர்வுகளில் சுமார் 10% உயர்ந்து 500 ரூபாய் மைல் கல்லை கடந்து சென்றுள்ளது. மும்பை பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தக நாளில், ஐடிசி நிறுவனத்தின் ஒரு பங்கு 510.6 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்த வளர்ச்சி, வலுவான காலாண்டு முடிவுகள் மற்றும் நேர்மறை சந்தை காரணமாக ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், ஜெப்ரீஸ் உள்ளிட்ட சந்தை மதிப்பாய்வு நிறுவனங்கள் ஐடிசி பங்குகள் தொடர்ந்து உயரும் என கணித்துள்ளன.

நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி, புகையிலை மீதான வரிகளை உயர்த்தாமல் அதே நிலையில் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, நேற்று 5% அளவிலும், இன்று 5% அளவிலும் ஐடிசி பங்குகள் உயர்ந்துள்ளன. ஏனெனில், பல்வேறு வர்த்தகங்களை உள்ளடக்கிய ஐடிசி குழுமத்திற்கு, கிட்டத்தட்ட 80% நிகர லாபம் மற்றும் 45% வருவாய் புகையிலை விற்பனை மூலம் கிடைத்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu