ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டோர்சி, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதற்கு பிறகு, ப்ளூ ஸ்கை என்ற பெயரில் புதிய சமூக தளத்தை உருவாக்கினார். இது ட்விட்டருக்கு நேரடி போட்டியாக இருந்தது. இந்த தளம், பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களை ப்ளூ ஸ்கை சென்றடைந்துள்ளது. கிட்டத்தட்ட 628000 கைபேசி பதிவிறக்கங்களை இந்த செயலி பதிவு செய்துள்ளது.
ஜாக் டோர்சியின் ப்ளூ ஸ்கை தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கையின்படி, 6 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களை இந்த தளம் சம்பாதித்துள்ளது. இதன் மூலம், ப்ளூ ஸ்கை நிறுவனத்தின் வளர்ச்சி 606% ஆக உள்ளது. அதே வேளையில், ட்விட்டர் நிறுவனத்தின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 2% அளவில் பதிவாகியுள்ளது. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை ப்ளூ ஸ்கை நிறுவனத்தை விட அதிகம் ஆகும். ட்விட்டருக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்கள் உள்ள நிலையிலும், ப்ளூ ஸ்கை நேரடி போட்டியாக அமைந்துள்ளது, இந்த அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.