ட்விட்டருக்கு மாற்றாக புதிய சமூக ஊடகத் தளத்தை உருவாக்கும் திட்டத்தில் ஜாக் டோர்சே

October 31, 2022

ட்விட்டர் நிறுவனத்தின் துணைவேந்தராக இருந்த ஜாக் டோர்சே, புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ப்ளூ ஸ்கை' (Bluesky) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சமூக வலைத்தளம், பீட்டா பரிசோதனை கட்டத்தில் (Beta Testing Phase) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதை தொடர்ந்து, ட்விட்டருக்கு மாற்றாக இந்த தளம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான ட்விட்டர் நிறுவனத்தின் செய்திக் குறிப்பில், இந்த புதிய […]

ட்விட்டர் நிறுவனத்தின் துணைவேந்தராக இருந்த ஜாக் டோர்சே, புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ப்ளூ ஸ்கை' (Bluesky) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சமூக வலைத்தளம், பீட்டா பரிசோதனை கட்டத்தில் (Beta Testing Phase) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதை தொடர்ந்து, ட்விட்டருக்கு மாற்றாக இந்த தளம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியான ட்விட்டர் நிறுவனத்தின் செய்திக் குறிப்பில், இந்த புதிய தளம் பரிசோதனை கட்டத்தில் இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜாக் டோர்சே, “சமூக ஊடக தளத்தின் மூலம், தகவல்களை மற்றும் பயனாளர்களை கட்டுப்படுத்த நினைக்கும் அனைத்து வர்த்தக அமைப்பிற்கும் ப்ளூ ஸ்கை போட்டியாக திகழும்” என்று கூறியுள்ளார். இந்த புதிய தளம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், பரவலான முறையில், லாப நோக்கமின்றி செயல்படும் சமூக ஊடகத் தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பிரைவேட் பீட்டா டெஸ்டிங்கில் இருக்கும் இந்த தளம், விரைவில் ஓபன் பீட்டா டெஸ்டிங் கட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu