சென்னையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பிப்ரவரியில் போராட்டங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 14 ஆம் தேதி தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், பிப்ரவரி 25 ஆம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.