ஜெகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இன்று தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடக்க நாளில் அவரது ராஜினாமா அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலை சிக்கல்களை காரணமாகக் காட்டி இன்று பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவை அவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். துணைத் தலைவர் என்பதுடன், அவர் மாநிலங்களவை தலைவராகவும் செயல்பட்டு வந்தார். எனவே, அந்த பொறுப்பிலிருந்தும் அவர் விலகியுள்ளார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நாளில் இவர் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.














