ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் சில்லறை விற்பனை 4.9% குறைந்தது

October 9, 2022

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், 88121 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 92710 விற்பனைகள் பதிவாகியிருந்தன. இதனால், சில்லறை விற்பனையில் 4.9% சரிவு பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், ஜாகுவார் பிராண்ட் கார்களின் விற்பனை 17340 ஆகவும், லேண்ட்ரோவர் பிராண்ட் கார்களின் விற்பனை 70781 ஆகவும் பதிவாகியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில், […]

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களின் சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், 88121 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 92710 விற்பனைகள் பதிவாகியிருந்தன. இதனால், சில்லறை விற்பனையில் 4.9% சரிவு பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், ஜாகுவார் பிராண்ட் கார்களின் விற்பனை 17340 ஆகவும், லேண்ட்ரோவர் பிராண்ட் கார்களின் விற்பனை 70781 ஆகவும் பதிவாகியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில், இதுவே 19248 மற்றும் 73462 என்பதாக முறையே பதிவாகி இருந்தது. எனவே, இரு பிராண்டுகளின் சில்லறை விற்பனையிலும், 9.9% மற்றும் 3.65% சரிவு முறையே பதிவாகி உள்ளது.

இது தொடர்பாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், சில்லறை விற்பனையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால், உலகளாவிய முறையில் நிலவும் செமி கண்டக்டர் பற்றாக்குறை காரணமாக, எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிறுவனத்தின் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டில் 5000 கார்கள் கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மொத்த கார் முன்பதிவுகளின் எண்ணிக்கை 2.05 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சில்லறை விற்பனை சரிவு தற்காலிகமானது என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu