ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா 2024 டிசம்பர் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராக, 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1-ம் தேதி ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளே உள்ளார், அவர் 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி இந்த பதவியை ஏற்றார். அவரது 4 ஆண்டு காலம் நவம்பர் 30-ஆம் தேதி முடிகிறது. மூன்று முறை அந்த பதவியில் இருந்த பார்கிளே, மேலும் நீடிக்க விரும்பவில்லை. இதையடுத்து, ஜெய் ஷா போட்டியின்றி ஐ.சி.சி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெய் ஷா, இந்தியாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார், என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் ஆகியவர்களின் வரிசையில் ஐ.சி.சி. தலைமை பதவி வகிக்கிறார். 35 வயதான ஜெய் ஷா, இளம் வயதில் ஐ.சி.சி. தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பதில் சாதனை பதிவு செய்துள்ளார்.