நடிகர் எஸ்.வி சேகருக்கு சிறை தண்டனை

February 20, 2024

சென்னை சிறப்பு நீதிமன்றம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக எஸ்.வி சேகர் தெரிவித்ததை அடுத்து அவரது சிறை […]

சென்னை சிறப்பு நீதிமன்றம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக எஸ்.வி சேகர் தெரிவித்ததை அடுத்து அவரது சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அபராத தொகையை அவர் செலுத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu