20 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில், மாணவர் ஒருவர் எந்த காரணமும் இல்லாமல் பள்ளிக்கு 20 நாட்கள் வராமல் இருந்தால் அந்த மாணவரது பெற்றோருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பள்ளியின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளது.
15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்த மாணவர் கல்வித்துறை மூலம் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார். 20 நாட்கள் வராத பிறகு கல்வித்துறை சட்ட நடவடிக்கையை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.