சிங்கப்பூர் பிரதமருடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

March 26, 2024

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் மற்றும் வெளியூர் துறை அமைச்சர் பி வி என் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை நேற்று சந்தித்தார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சிங்கப்பூர் பிரதமரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது, சிங்கப்பூர் பிரதமர் செயின் லூங்கை சந்தித்து பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் என்னிடம் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடைய […]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் மற்றும் வெளியூர் துறை அமைச்சர் பி வி என் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை நேற்று சந்தித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சிங்கப்பூர் பிரதமரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது, சிங்கப்பூர் பிரதமர் செயின் லூங்கை சந்தித்து பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் என்னிடம் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடைய நேர்மறையான நிலைபாடு இந்தியா சிங்கப்பூர் இடையேயான உறவை பலப்படுத்துகிறது என்று கூறினார். அதோடு சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே சண்முகம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் கான் கிம் யோங், நிதி அமைச்சர் லாரன் வோங், தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் தியோ சீ ஹீன், வெளியுறவுத் துறை அமைச்சர் விவியின் பாலகிருஷ்ணன் ஆகியோரை அமைச்சர் ஜெயசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மலேசியாவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu