விண்வெளியில் நிறுவப்பட்டுள்ள நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, வேற்று கிரகம் ஒன்றின் வளிமண்டலம் குறித்த தெளிவான புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.
Wasp 39b என்ற கோள், சூரியனிலிருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது விர்கோ விண்மீன் மண்டலத்தின் நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருகிறது. முன்னதாக, இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில், கரிய அமில வாயு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி தொடங்கியது. இந்நிலையில், Wasp 39b கிரகத்தின் வளிமண்டலம் குறித்த புகைப்படம் வெளிவந்துள்ளது. இது, அந்த கிரகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் உள்ளார்களா என்பதை ஆராய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இது போன்ற தெளிவான புகைப்படங்கள் கிடைக்கப்படவில்லை. எனவே, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தெளிவான புகைப்படம், ஆராய்ச்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது.














