நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிக முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளது. அதன்படி, புறக்கோளான K2-18b ல், உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டை மெத்தில் சல்பைட் எனப்படும் உயிரி பொருளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது."K2-18b புறக்கோள் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் புறக்கோள் குறித்து ஜேம்ஸ் வெப் கண்டறிந்துள்ளதை இறுதியாக கொள்ள முடியாது. தொடர்ந்து, கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும், தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன" என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டைமெத்தில் சல்பைடு உடன் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் தரவுகள் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.