பிரபஞ்சத்தின் பழமையான உயிரி பொருள் - ஜேம்ஸ் வெப் புகைப்படம் பகிர்வு

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் காணப்படும் உயிரி பொருளை படம் பிடித்து காட்டியுள்ளது. இதுவரை விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரி பொருள்களில் இதுவே மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. இவை கார்பன் தாதுவை அடிப்படையாகக் கொண்ட உயிரி பொருள் ஆகும். நமது பிரபஞ்சம் உருவாகி குறுகிய காலத்திற்குள், பாலிசைகிளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் என்ற கார்பன் தாது இருந்துள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. அதாவது, பிரபஞ்சத்தின் தற்போதைய வயதில் 10% வயது இருந்த காலத்தில், இந்த கார்பன் பொருள் […]

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் காணப்படும் உயிரி பொருளை படம் பிடித்து காட்டியுள்ளது. இதுவரை விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரி பொருள்களில் இதுவே மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. இவை கார்பன் தாதுவை அடிப்படையாகக் கொண்ட உயிரி பொருள் ஆகும். நமது பிரபஞ்சம் உருவாகி குறுகிய காலத்திற்குள், பாலிசைகிளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் என்ற கார்பன் தாது இருந்துள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. அதாவது, பிரபஞ்சத்தின் தற்போதைய வயதில் 10% வயது இருந்த காலத்தில், இந்த கார்பன் பொருள் இருந்துள்ளது. இதுபோன்ற தாது பொருள் பல்வேறு உயிரி பொருட்களை தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தது. எனவே, பெரு வெடிப்பு நிகழ்ந்த பிறகு இத்தனை பெரிய அளவில் வெவ்வேறு விதமான உயிரி பொருட்கள் தோன்றுவதற்கு இது முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கிய மைல்கல் கண்டுபிடிப்பாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu