வியாழன் கோளில் காணப்படும் புதுவிதமான வடிவங்கள் - ஜேம்ஸ் வெப் பகிர்வு

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வியாழன் கோள் பற்றிய பல்வேறு புதிய தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளது. அதன்படி, வியாழன் கோளின் வளிமண்டல மேலடுக்கில் புதுவிதமான வடிவங்கள் தென்படுவதாக தெரியவந்துள்ளது. வியாழன் கிரகத்தில் மிகப்பெரிய சிவப்பு புள்ளி காணப்படுகிறது. இது, அங்கு நிலவும் புயல் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியை விட இரு மடங்கு பெரியதாகவும், கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வருவதாகவும், இது சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிக்கு மேலே தான் புதுவித வடிவங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி […]

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வியாழன் கோள் பற்றிய பல்வேறு புதிய தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளது. அதன்படி, வியாழன் கோளின் வளிமண்டல மேலடுக்கில் புதுவிதமான வடிவங்கள் தென்படுவதாக தெரியவந்துள்ளது.

வியாழன் கிரகத்தில் மிகப்பெரிய சிவப்பு புள்ளி காணப்படுகிறது. இது, அங்கு நிலவும் புயல் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியை விட இரு மடங்கு பெரியதாகவும், கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வருவதாகவும், இது சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிக்கு மேலே தான் புதுவித வடிவங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. கடந்த 2022 ஜூலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இன்ஃப்ரா ரெட் ஸ்பெக்ட்ரோகிராப் மூலம் வியாழன் கோளின் இந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் புதுவிதமான வடிவங்கள் தென்பட்டுள்ளன. இருள் நிறைந்த வளைவுகள், பிரகாசமான புள்ளிகள் போன்றவை இதில் அடங்கும். விஞ்ஞானிகள் இது பற்றி தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu