ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்பு படையினர் பள்ளியில் பயிலும் ஓங்கார் பத்ரா என்ற 12 ஆம் வகுப்பு மாணவன், பாரடாக்ஸ் சோனிக் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி தலைமையில் இந்தியாவின் முதல் ஓபன் சோர்ஸ் செயற்கை கோளான ‘இன் கியூப்’ -ஐ வடிவமைத்துள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்த செயற்கைக்கோள் இஸ்ரோ உதவியுடன் ஏவப்பட உள்ளது. நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஒரு கிலோ மட்டுமே எடை கொண்டதாகும்.
இந்த நானோ செயற்கை கோளுக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளதாக ஓங்கார் பத்ரா தெரிவித்துள்ளார். முதலாவது, எடை குறைந்த செயற்கைக்கோள் விண்வெளியில் எவ்வாறு செயல்படும் என்பதை அறிவதாகும். இரண்டாவது, வெப்பநிலை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகும். ஓங்கார் பத்ரா, கொரோனா குறித்து பயன் தரும் விதத்தில் வலைத்தளம் உருவாக்கியதற்காக தேசிய பால சக்தி விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.