கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10.4% உயர்ந்து, 1.72 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, 1.7 லட்சம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரி வசூல் பதிவாவது இது 3 வது முறையாகும். மேலும், இதுவரை பதிவான மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூலில், 2வது அதிகபட்ச வரி வசூலாக இது சொல்லப்பட்டுள்ளது. முதல் இடத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில், ஜிஎஸ்டி வரி வசூல் 172129 கோடியாக பதிவாகியுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி இருந்து சிஜிஎஸ்டி 43552 கோடி ரூபாயாகவும், எஸ்ஜிஎஸ்டி 37257 கோடி ரூபாயாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.














