உலக வரலாற்றில் அதி வெப்பமான ஜனவரி மாதமாக 2024 ஜனவரி திகழ்ந்துள்ளது. அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை மணியை இது எழுப்பி உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023 ஜூன் மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் உலக வரலாற்றில் வெப்பமான மாதமாக பதிவாகி வருகிறது. அந்த வரிசையில் கடந்த ஜனவரி மாதமும் உலக வரலாற்றிலேயே அதி வெப்பமான ஜனவரி மாதமாக உள்ளது. அத்துடன், கடந்த 12 மாதங்களாக, தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தை விட 1.5 C அளவுக்கு மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு கூடுதல் வெப்பமாக இருப்பதற்கு மூன்றில் ஒரு பங்கு வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், உலக வரலாற்றில் முதல் 5 வெப்பமான வருடங்கள் பட்டியலில் 2024 நிச்சயமாக இடம் பிடிப்பதற்கு 99% வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.