ஜப்பானில் உணவு மருந்து உட்கொண்ட இருவர் பலி - 106 பேருக்கு சிகிச்சை

March 28, 2024

ஜப்பானில் கொழுப்பை கரைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட உணவு மருந்தை உட்கொண்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 106 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட அந்த உணவு மருந்தை திரும்ப பெறுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. கொபயாஷி பார்மக்யூட்டிக்கல் என்ற நிறுவனம் பல்வேறு சத்து மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. அதில் சிவப்பு நிற ஈஸ்ட் அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவும் ஒன்று. இந்த நிலையில், இதனை உட்கொண்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அது தவிர, இதை சாப்பிட்ட பலருக்கும் […]

ஜப்பானில் கொழுப்பை கரைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட உணவு மருந்தை உட்கொண்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 106 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட அந்த உணவு மருந்தை திரும்ப பெறுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

கொபயாஷி பார்மக்யூட்டிக்கல் என்ற நிறுவனம் பல்வேறு சத்து மருந்துகளை விற்பனை செய்து வருகிறது. அதில் சிவப்பு நிற ஈஸ்ட் அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவும் ஒன்று. இந்த நிலையில், இதனை உட்கொண்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அது தவிர, இதை சாப்பிட்ட பலருக்கும் பல்வேறு உடல் பாதைகள் ஏற்பட்டதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட இந்த உணவு மருந்தை ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. இதன் எதிரொலியாக, சீனா மற்றும் தைவான் நாடுகளில் இணைய வழியில் மேற்கொள்ளப்படும் இந்த உணவு மருந்தின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu