ஜப்பானில் 6.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் வடமேற்கில் சுமார் 208 கிலோ மீட்டர் தொலைவில், 68 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்ததாக அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதோடு புகுஷிமா மாகாணத்தின் கடற்கரை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இதைத்தொடர்ந்து இந்தியாவில் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அருகே நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிட்டர் அளவில் 3.9 ஆக பதிவானது.