பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் - ஜப்பான் அமீரகம் இடையே ஒப்பந்தம்

May 26, 2023

ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு சார்ந்த கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வது குறித்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜப்பானின் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. ஜப்பான் நாடு, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுடன் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. அந்த வரிசையில், ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது. அமீரகம், உலகின் 11 வது பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் மிக […]

ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு சார்ந்த கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வது குறித்து புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜப்பானின் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

ஜப்பான் நாடு, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுடன் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. அந்த வரிசையில், ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது. அமீரகம், உலகின் 11 வது பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜப்பான் எதிர்காலத்திற்கான போர் விமானத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, பிரிட்டன் மற்றும் இத்தாலியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த சமயத்தில், அமீரகத்துடனான ஒப்பந்தம் நிகழ்ந்துள்ளதால், இந்த தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட 3 நாடுகளைத் தாண்டி, மற்ற நாடுகளுக்கு பகிர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu