நிலவுக்கு ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலம், அங்கே வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆனால், போதிய எரிசக்தி இல்லாததால், கடந்த சனிக்கிழமை இதன் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க முறையில் நிலவில் தரையிறங்கிய ஸ்லிம் விண்கலம், அடுத்த 3 மணி நேரத்திலேயே எரிசக்தி குறைபாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், சூரிய ஒளி கிடைக்கும் பட்சத்தில், இதனை மீண்டும் இயக்க முடியும் என ஜப்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேற்கு புறத்திலிருந்து சூரிய ஒளி நிலவில் படும்போது, விண்கலத்துக்கு தேவையான எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டு, அதன் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் - ஜாக்ஸா தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில், ஸ்லிம் விண்கலம் உள்ள இடத்தில் காலைப்பொழுது நிலவுகிறது. இதுவே, மதிய பொழுது வரும் பொழுது விண்கலத்துக்கு போதிய சூரிய ஒளி கிடைக்கும் என நம்பப்படுகிறது. பூமியைப் போல அல்லாமல், நிலவில் நெடு நாட்களுக்கு ஒரு நாள் பொழுது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.