இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, ஜப்பான் தனது நிலவு திட்டத்தில் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள, ஸ்லிம் (SLIM) என்ற விண்கலத்தை ஜப்பான் அனுப்பி இருந்தது. இந்த விண்கலம், நேற்று, நிலவு சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் சுமார் 100 மீட்டர் பரப்பளவுக்குள் சிலிம் விண்கலம் தரையிறங்க உள்ளது. அதற்கேற்றவாறு இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது ‘நிலவின் ஸ்னைப்பர்’ என அழைக்கப்படுகிறது. ஸ்லிம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் கால் பதிக்கும் 5வது நாடாக ஜப்பான் வரலாறு படைக்க உள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளன.