ஜப்பான் அரசு ஆஸ்ப்ரே ரக விமானங்களை இயக்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆஸ்ப்ரே ரக விமானம் ஒன்று எட்டு பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது இது கடந்த புதன்கிழமை ஜப்பான் கரை ஓரத்தில் நடந்தது. இது குறித்து பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஸ்ப்ரே விமான விபத்து தொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தி வருகிறது. எனவே அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்துமாறு உத்தரவு வந்துள்ளது. விபத்து பகுதிகளில் தேடுதல் பணிக்காக மட்டும் அவை பயன்படுத்த உள்ளன. கடந்த புதன் கிழமை பயிற்சிக்காக எட்டு பேருடன் சென்ற அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆஸ்பிரே விமானம் கடலில் விழுந்தது. அதில் விமானத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்களை காணவில்லை. அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.