ஜப்பானின் நிலவு திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, கடந்த வாரத்தில், மோசமான வானிலை காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி, இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக, SLIM என்ற பெயரில், நிலவு திட்டம் ஒன்றில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. இந்த முறை, ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் தயாரித்துள்ள H II A ராக்கெட் நிலவில் தரையிறங்கும் லேண்டரை சுமந்து செல்ல உள்ளது. இந்திய நேரப்படி செப்டம்பர் 15 அதிகாலை 5:12 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், ஜப்பானின் சிலிம் திட்டத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், நிலவில் கால் பதிக்கும் 5வது உலக நாடாக ஜப்பான் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.