இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து புதிய ரக போர் விமானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகள் சேர்ந்து புதிய ரக போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளால் இவர்களுக்கு அச்சுறுத்தல் வருகிறது. இவர்களிடமிருந்து பாதுகாக்க இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்வதாக கூறியுள்ளனர். ஜப்பான் பிற நாடுகளுடன் சேர்ந்து ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் கிஷாரா கூறுகையில், நாட்டின் வான்வழி பாதுகாப்புக்காக அதிக திறன் கொண்ட போர் விமானங்களை உருவாக்குவது அவசியமானது என்று கூறியுள்ளார். ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் புதிய ரக போர் விமானத்தை உருவாக்குவது அவசியம் எனவும் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி இந்த கூட்டு முயற்சி மூலம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் போன்ற நெருக்கடி தவிர்க்கப்படும். மிட்சுபிஷி எஃப் எக்ஸ் என அழைக்கப்படும் இந்த ஜெட் விமானத்தின் தயாரிப்பு என்பது இந்த மூன்று நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் நடைபெறும். இதற்கு ஜப்பான் தலைமை ஏற்று உள்ளது. இந்த தலைமை பொறுப்பு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.