மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட எரிபொருளில் இயங்கும் ராக்கெட் - ஜப்பான் வடிவமைப்பு

December 20, 2023

மாட்டு சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் கொண்டு ராக்கெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் என்ற புத்தாக்க நிறுவனம், புதிய ராக்கெட் என்ஜின் ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட் என்ஜின், மாட்டு சாணத்தில் இருந்து கிடைக்கும் மீத்தேன் வாயுவை கொண்டு உருவாக்கப்படும் எரிபொருளால் இயக்கப்படுகிறது. அதன்படி, புத்தாக்க எரிசக்தியை விண்வெளி துறையில் வெற்றிகரமாக பயன்படுத்திய முதல் தனியார் நிறுவனமாக இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் வரலாறு படைத்துள்ளது. அண்மையில், இந்த ராக்கெட் எரிபொருள் சோதனை நிகழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட […]

மாட்டு சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் கொண்டு ராக்கெட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் என்ற புத்தாக்க நிறுவனம், புதிய ராக்கெட் என்ஜின் ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த ராக்கெட் என்ஜின், மாட்டு சாணத்தில் இருந்து கிடைக்கும் மீத்தேன் வாயுவை கொண்டு உருவாக்கப்படும் எரிபொருளால் இயக்கப்படுகிறது. அதன்படி, புத்தாக்க எரிசக்தியை விண்வெளி துறையில் வெற்றிகரமாக பயன்படுத்திய முதல் தனியார் நிறுவனமாக இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் வரலாறு படைத்துள்ளது. அண்மையில், இந்த ராக்கெட் எரிபொருள் சோதனை நிகழ்த்தப்பட்டது. கிட்டத்தட்ட 10 வினாடிகளுக்கு ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாக எரியூட்டப்பட்டது. புத்தாக்க எரி சக்தியால் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த ராக்கெட் எஞ்சின் ஜீரோ என அழைக்கப்படுகிறது. மேலும், இது, ராக்கெட்டுக்கான செலவையும் கணிசமான அளவு குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu