5ஜி யை விட 20 மடங்கு வேகத்தில் உலகின் முதல் 6ஜி சாதனம் வெளியீடு

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த சாதனத்தை வடிவமைத்துள்ளன. இது ஒரு மாதிரி சாதனம் (புரோட்டோடைப்) ஆகும். என் டி டி கார்ப்பரேஷன், டொகோமோ, புஜித்சூ, என் இ சி கார்ப்பரேஷன் போன்ற பல நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உலகின் முதல் 6ஜி சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மூலம் நொடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. குறுகிய தொலைவுக்கு […]

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த சாதனத்தை வடிவமைத்துள்ளன. இது ஒரு மாதிரி சாதனம் (புரோட்டோடைப்) ஆகும்.

என் டி டி கார்ப்பரேஷன், டொகோமோ, புஜித்சூ, என் இ சி கார்ப்பரேஷன் போன்ற பல நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உலகின் முதல் 6ஜி சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மூலம் நொடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. குறுகிய தொலைவுக்கு 100 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் கூடுதல் தொலைவுக்கு 300 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் இந்த சாதனம் சோதனை செய்யப்பட்டது. அதன்படி, 5ஜி தகவல் பரிமாற்றத்தை விட 20 மடங்கு வேகத்தில் இந்த சாதனம் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது, நிகழ்நேர ஹாலோகிராபிக் கம்யூனிகேஷன் மற்றும் அதிவேக விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவங்கள் போன்றவற்றை பயனர்களால் பெற முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu