ஜப்பான் நிறுவனம் மிட்சுபிஷி தமிழ்நாட்டில் ரூ.1800 கோடியில் தொழிற்சாலையை தொடங்குகிறது

January 18, 2023

ஜப்பான் நிறுவனம் மிட்சுபிஷி தமிழ்நாட்டில் ரூ.1800 கோடியில் தொழிற்சாலையை தொடங்க உள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.1,588 கோடி மதிப்பிலான முதலீட்டில் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. இதில் புதிய எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு தமிழ்நாட்டில் நுழைந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜப்பானிய எலெக்ட்ரிக் நிறுவனமான மிட்சுபிஷி தனது முதல் தொழிற்சாலையை இந்தியாவில் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மிட்சுபிஷி நிறுவன அதிகாரி கூறுகையில், ‘‘தமிழகத்தில் […]

ஜப்பான் நிறுவனம் மிட்சுபிஷி தமிழ்நாட்டில் ரூ.1800 கோடியில் தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.1,588 கோடி மதிப்பிலான முதலீட்டில் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. இதில் புதிய எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு தமிழ்நாட்டில் நுழைந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஜப்பானிய எலெக்ட்ரிக் நிறுவனமான மிட்சுபிஷி தனது முதல் தொழிற்சாலையை இந்தியாவில் தமிழகத்தில் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மிட்சுபிஷி நிறுவன அதிகாரி கூறுகையில், ‘‘தமிழகத்தில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை ரூ.1,800 கோடி செலவில் நிறுவப்பட உள்ளது. 2025 அக்டோபர் மாதத்தில் உற்பத்தியை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கான தேவை பூர்த்தி செய்யப்படும். உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu